Monday, October 12, 2009

அமெரிக்க நிபுணர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு


ஸ்டாக்ஹோம்: அமெரிக்க பொருளாதார நிபுணர்களான எலினார் ஆஸ்ட்ரோம் மற்றும் ஆலிவர் வில்லியம்சன் ஆகிய இருவருக்கும், இந்தாண்டிற்கான பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளதாக, பரிசு குழுவினர் நேற்று தெரிவித்தனர். இதுகுறித்து பரிசு கமிட்டியினர் கூறியதாவது: பொது சொத்தை பயனீட்டாளர்கள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதை தெரிவித்ததற்காக, எலினார் ஆஸ்ட்ரோமிற்கும், வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வளிக்கும் நடைமுறைகளை தெரிவித்ததற்காக, ஆலிவர் வில்லியம்சனுக்கும் இந்தாண்டிற்கான பொருளாதார துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கடந்த 1968ம் ஆண்டு முதல், ஆல்பிரட் நோபலின் நினைவாக, பொருளாதார துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த துறைக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண், எலினார் ஆஸ்ட்ரோம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: