Wednesday, October 14, 2009

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் ஆர்வம் குறைவு



20 ஓவர் ஆட்டத்தால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஐ.பி.எல். போட்டியின் வெற்றியை கருத்தில் கொண்டு இப்படி கருத்து தெரிவிக்கப்பட்டது.ஆனால் அப்படி எதுவும் நடந்து விடாது என்பதற்கு சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியை சொல்லலாம்.

இந்த போட்டியை பார்க்க ரசிகர்களின் ஆர்வம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதிலும், டெலிவிஷனில் பார்ப்பதிலும் ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.

2008-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியை டெலிவிஷனில் பார்த்தவர்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் சராசரி 3.29 ஆக இருந்தது. 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் டி.ஆர்.பி. ரேட்டிங் 2.97 ஆக குறைந்தது.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியின் டி.ஆர்.பி. ரேட்டிங் சராசரி 0.74 ஆகும். தெண்டுல்கர், யுவராஜ்சிங், டோனி, யூசுப்பதான் போன்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் இதில் விளையாடவில்லை. இதனால் ரசிகர்களின் ஆர்வம் குறைவாக இருக்கலாம் என்று தனியார் சேனல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தென்ஆப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் (50 ஓவர்) டி.ஆர்.பி. ரேட்டிங் சரசரி 1.1 ஆக இருந்தது. இதனால் ஒரு நாள் போட்டி அழிந்து விடவில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

ஐ.பி.எல். போட்டியின் வெற்றியை தொடர்ந்து அந்த அமைப்பினர் சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் போட்டியை முதன் முதலாக அறிமுகப்படுத்தினர். ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. போட்டி அமைப்பாளர்களுக்கு இது ஏமாற்றமே.
லலித் மோடி கிரிக்கெட்டின்n எதிர் காலத்தை பாழ் படுத்திவிட்டார் .. வீரர்களும் பணத்துக்காக அதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் ... கிரிக்கெட் அழிந்து கொண்டிருக்கிறது ...இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு இன்டர்நேஷனல் போட்டிகளே இருக்காது ...

No comments: