
அதிரடி அறிவிப்பில் லாலுவை மிஞ்சி விடுவார் போலிருக்கிறது இப்போதுள்ள ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி. லாலுவின் பெயரே தெரியாமல் செய்ய வேண்டும் என்று, அவர் போட்ட பல திட்டங்களை ரத்து செய்து விட்டார்; ஐந்தாண்டுக்குப் பின் தன் பெயர் தான் தெரிய வேண்டும் என்று ஒவ்வொன்றிலும் தீவிரமாக பிளான் போட்டு செயல்படுத்துகிறார். அவரின் புதிய பிளான் என்ன தெரியுமா? "ரயில்வே "டிவி' ஆரம்பிப்பது தான். "பார்லிமென்ட் சேனல் என்று தனி "டிவி' இருக்கும் போது, உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட ரயில்வே, தனி சேனல் அமைத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?' என்று நினைத்தார் மம்தா. ரயில்வே ஆலோசனை குழுவிடம் இந்த பொறுப்பை விட்டார். "ரயில்வே சேனல் ஆரம்பிப்பது அவசியம் தான்; ரயில்வே வருமானத்தில் சிறிய அளவு ஒதுக்கினாலே போதும்' என்று பரிந்துரை செய்தது குழு. இப்போது மம்தா குஷியாகி விட்டார். அடுத்த சில மாதங்களில் ரயில்வே "டிவி' ஆரம்பமாகி விடும். வழக்கமான பொழுதுபோக்குகளை தவிர, ரயில்களின் அன்றாட போக்குவரத்து குறித்தும், முன்பதிவு குறித்தும் தகவல்களை இனி "டிவி'யிலேயே பெறலாம். அது சரி, "டிவி'க்கு பெயர் மம்தா "டிவி'யா?
Source: http://www.dinakaran.com
No comments:
Post a Comment