
இந்தி திரையுலகின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் “மிஸ்டர் ரோமியோ”, குஷி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
லண்டனில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்று சக நடிகையின் நிறவெறி அவதூறுக்கு ஆளாகி உலகம் முழுவதும் பிரபலமானார். ஹாலிவுட் நடிகர் பொது மேடையில் முத்தமிட்டு ஷில்பாவை இன்னொரு சர்ச்சையில் சிக்கவைத்தார்.
தற்போது லண்டன் தொழில் அதிபருடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
இந்த நிலையில் இன்னொரு பிரச்சினையில் சிக்கியுள்ளார். மும்பையில் ஷில்பாவுக்கு சொந்தமான அழகு நிலையம் உள்ளது. வசதியான பெண்கள், நடிகைகள் இந்த அழகு நிலையத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு முக அழகு, கால், கைகள் அழகு, முடியழகு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அழகு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக அவர்களிடம் அதிகமாக கட்டணத்தை ஷில்பாஷெட்டி வசூலிக்கிறார்.
இந்த அழகு நிலையத்துக்கு கவுரிகான் என்ற 22 வயது மாடல் அழகி வந்தார். தனது முகத்தை மேலும் வசீகரமாக்க சிகிச்சை அளிக்கும்படி வேண்டினார். அவருக்கு கடந்த சில மாதங்களாக முகத்தில் கிரீம் போட்டு தேய்த்தனர். வீட்டில் வைத்து போடவும் பவுடர், கிரீம், மருந்துகள் கொடுத்து அனுப்பினார்கள். இதற்காக அவரிடம் 38 ஆயிரம் ரூபாய் பீஸ் வாங்கப்பட்டதாம்.
ஆனால் ஷில்பாஷெட்டி அழகு நிலைய கிரீம்களை உபயோகித்த பிறகு கவுரிகான் முகம் திடீரென்று அலங்கோலமாகத் துவங்கியது. முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றின. தோல் பளபளப்பு மங்கியது. வயதான தோற்றத்துக்கு மாறினார்.
இதனால் அதிர்ச்சியான கவுரிகான் ஒஸ்வாரா போலீஸ் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி மீது புகார் செய்தார். ரூ.17 லட்சம் நஷ்டஈடு கேட்டு ஷில்பாவுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.
கவுரிகான் குற்றச்சாட்டுகளை ஷில்பா ஷெட்டி வக்கீல் மறுத்துள்ளார். சிகிச்சை காலத்தில் முகத்தை ஒழுங்காக பராமரிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதற்கு ஷில்பா ஷெட்டி பொறுப்பாக முடியாது எனறு அவர் கூறியுள்ளார்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment