Monday, November 23, 2009

மைக்கேல் ஜாக்சன் கையுறை 1.75 கோடி ரூபாய்க்கு ஏலம்


நியூயார்க்: மறைந்த பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் கையுறை, ஒரு கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.உலக புகழ் பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், அதிகப்படியான போதை மருந்தை உட் கொண்டதால், கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தார். இவருக்கு அதிக மருந்தை கொடுத்த அவரது டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள் நியூயார்க்கில் உள்ள ஜூலியன் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கையுறை 25 லட்சம் ரூபாய் வரை ஏலம் போகும், என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஹாங்காங்கை சேர்ந்த வர்த்தகர் பாஸ்மேன் மா என்பவர், மைக்கேல் ஜாக்சனின் வெள்ளை கையுறையை ஒரு கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.இதே போல ஜாக்சன் 89ம் ஆண்டு "பேட்' என்ற இசைச் சுற்றுலாவின் போது பயன்படுத்திய கருப்பு நிற மேலாடை, ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது எதிர்ப்பார்க்கப்பட்ட தொகையை விட 20 மடங்கு அதிகமாகும்.

No comments: