மண்டபம் : இலங்கை கடற்படைத் தாக்குதலுக்கு பயந்து, விசைப்படகில் இரவில் மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்கின்றனர்.
இலங்கை கடற்படை ராமேஸ்வரம், மண்டபம் விசைப்படகு மீனவர்களை தாக்குவது தொடர்ந்து நடக்கிறது. மத்திய,மாநில அரசுகள் கண்டு கொள்ளாத நிலையில், மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இரவில் மீன் பிடிக்கும்போது வெளிச்சத்திற்காக போகஸ் லைட், தீப்பந்தங் களை உபயோகிப்பர்.ஆனால், மண்டபம் மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படைக்கு பயந்து, நடுக்கடலில் இரவில் விசைப்படகில் எவ்வித வெளிச்சமும் இன்றி, இருளில் மீன் பிடி தொழில் செய் கின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "நம் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமைகளை நாம் இழந்து வருகிறோம். இலங்கை கடற்படை அத்து மீறி நுழைந்து எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.இலங்கை கடற்படை இரவில் எங்களை அடையாளம் கண்டு தாக்குவதால், வெளிச்சமின்றி இருளில் மீன் பிடித்து வருகிறோம். வெளிச்சம் இல்லாததால் மீன் பிடிக்க மிகுந்த சிரமமாக உள்ளது' என்றனர்.அரசு தலையிட்டு மீனவர்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவர வேண்டும்.

பாவம், இவர்களின் அழுகுரலுக்கு கை கொடுக்கும் முதல் அமைச்சர் வேண்டும், தமிழகத்துக்கு சொந்த மண்ணில் (நாட்டில்) அந்நிய அரசுக்கு அதுவும் ஒரு இந்தியாவை விட மிகவும் சிறய கப்பற்படையை கொண்ட ஒன்றை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை. அவர்கள் அதிகம் துப்பாக்கி சூடு நடத்துவது சர்வதேச கடல் எல்லையில் தான். இந்த பிரச்சனையை எதிர்த்து குரல் கொடுக்க எந்த அரசியல் அமைப்பும் முன் வருவதில்லை. நம் மக்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிபடுதுவதிலை. இனிமேலாவது மீனவ மக்களின் வாழ்வாதார உரிமையை நிலை நாட்ட நம் அரசியல்வாதிகள் சுயநலமற்ற முறையில் தீர்வு காண வேண்டும்.
No comments:
Post a Comment