Tuesday, November 3, 2009

காஷ்மீரில் 2 தீவிரவாதிகளை கடித்து கொன்ற கரடிகள்


பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் அடர்ந்த காடுகளுக்குள் பதுங்கி இருந்து பின்னர் ஊர் பகுதிகளுக்கு வருகிறார்கள். இப்படி காட்டுக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 2 பேரை கரடிகள் கடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது.

காஷ்மீர் மாநிலம் சோவியான் மாவட்டத்தில் உள்ள பிர்பாஞ்சாப் என்ற இடத்தில் அடர்ந்த காடு உள்ளது. கரடி மற்றும் வன விலங்குகள் நடமாட்டம் உண்டு.

இங்குள்ள கரடி குகை ஒன்றில் தீவிரவாதிகள் 2 பேர் பதுங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கரடிகள் 2 தீவிரவாதிகளையும் கடித்து கொன்றன.

அவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பெயர் கைசார் அகமது, ஷபிபுல்லா என்று தெரிந்தது.

அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் 2 ஏ.கே.47 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

கடந்த 20 வருடத்தில் வன விலங்கு தாக்குதலில் தீவிரவாதிகள் பலியானது இதுதான் முதல் தடவை.

No comments: