Wednesday, November 11, 2009

2011 உலக கோப்பை கிரிக்கெட் சென்னையில் 4 ஆட்டங்கள்


சென்னை, : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (2011) இந்தியா & வெஸ்ட்இண்டீஸ் மோதும் லீக் போட்டி உட்பட 4 ஆட்டங்கள் சென்னையில் நடக்கவுள்ளன. இந்த தொடரின் பைனல் உட்பட 29 ஆட்டங்கள் இந்தியாவில் நடக்கிறது. இலங்கையில் 12 ஆட்டங்களும், வங்கதேசத்தில் 8 ஆட்டங்களும் நடக்கிறது. பாகிஸ்தானில் நடக்க இருந்த போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 43 நாட்கள் (பிப்.19 & ஏப்.2) போட்டிகள் நடக்கிறது. மிர்பூரில் பிப்ரவரி 19ம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா & வங்கதேசம் மோதுகின்றன. இறுதிப் போட்டி மும்பையில் ஏப்ரல் 2ல் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 4 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்தியா & வெஸ் ட்இண்டீஸ் (மார்ச்.20), கென்யா & நியூசிலாந்து, தென்ஆப்ரிக்கா & இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் & இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கம் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருவதால், கடந்த ஒரு வருடமாக எந்த போட்டியும் நடக்கவில்லை. இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியின் 4 ஆட்டங்கள் இங்கு நடக்க உள்ளதால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.