
பாரீஸ், : தொடர்ந்து 6 நாள், 6 மணி நேரம் ஓடக் கூடிய படம், 30 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. பாரீசில் விரைவில் இது திரையிடப்படுகிறது. லண்டனைச் சேர்ந்த இயக்குனர் ஜெரார்ட் கோரன்ட். இவர் 1978ம் ஆண்டு முதல் மிக நீண்ட படத்தை எடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக பிரபலங்கள், கலைஞர்கள், தத்துவ மேதைகள், பத்திரிகையாளர்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோருக்கு 3 நிமிடம் ஒதுக்கினார். அந்த 3 நிமிடங்களுக்குள் அவர்கள் எதையாவது செய்ய வேண்டும். அதை ஜெரார்ட் படமாக்கியுள்ளார். அந்தப் படம் இப்போது 150 மணி நேரம் (6 நாள், 6 மணி நேரம்) ஓடக்கூடிய அளவுக்கு உருவாகியுள்ளது. அதற்கு Ôசினிமா&டன்Õ என பெயரிடப்பட்டுள்ளது. திரைப்பட விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், மீடியா கருத்தரங்குகள் ஆகியவற்றில் கேமராவுடன் பங்கேற்ற ஜெரார்ட், அங்கு வரும் பிரபலங்களின் எண்ணங்களை படமாக்கியுள்ளார். இந்தப் படம், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்த மாத இறுதியில் திரையிடப்படுகிறது. உலகின் மிக நீளமான படம் என்ற சாதனையை Ôசினிமா&டன்Õ படைத்துள்ளது. இதுபற்றி ஜெரார்ட் கூறுகையில், ÔÔமுதலில் 100 பிரபலங்களின் கருத்தை புதிய கோணத்தில் படமாக்கி வெளியிட விரும்பினேன். அந்த திட்டம் வெற்றிகரமாக அமையவே, மேலும் பலருக்கு வாய்ப்பு தந்து, 150 மணி நேரம் ஓடக்கூடிய மிக நீண்ட படமாக மாற்றினேன்ÕÕ என்றார்.
Source: http://www.dinakaran.com
No comments:
Post a Comment