
சென்னை : டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உட்பட 3 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி வளாகத்தில், வரும் 14ம் தேதி நடக்கிறது. பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை வகிக்கிறார். விழாவில் 2,287 மாணவர்களுக்கு பிஎச்.டி, எம்.டெக், எம்.பி.டி, பி.டெக், பி.டி.எஸ், பி.எஸ்சி, பி.பி.டி. ஆகிய பட்டங்கள் வழங்கப்பட உள்ளது. இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் முனைவர் வி.கே.சரஸ்வத், கிரிக்கெட் வீரர் கபில்தேவ், திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் வி.என்.ராஜசேகரன் பிள்ளை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
Source: http://www.dinakaran.com/
No comments:
Post a Comment