
புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் காபினட் அந்தஸ்தில் உள்ள மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணச் செலவு ரூ.300 கோடியை தாண்டி இருக்கிறது. இதில் உள்நாட்டு பயணத்துக்காக செலவிடப்பட்டு இருப்பது ரூ.163 கோடி. இந்த செலவினங்கள் அனைத்தும் 2006ல் இருந்து கணக்கிடப்பட்டவை. ஐ.மு. கூட்டணியின் முதல் ஆட்சியில் காபினட் அமைச்சர்கள் 30 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளில் குறைவாக இருந்த பயணச் செலவு 2008&09ம் ஆண்டில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் மத்திய இணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.21 கோடி என்றும், உள்நாட்டுப் பயணச் செலவு ரூ. 27 கோடி என்றும் தெரிய வந்துள்ளது. தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின்கீழ் எஸ்.சி. அகர்வால் என்பவர் கேட்ட தகவலுக்கு மத்திய அமைச்சரவை தலைமையகம் இவ்வாறு பதில் அளித்துள்ளது.
Source: http://www.dinakaran.com
No comments:
Post a Comment