
இந்தூர்: பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ரமேஷ் மென்டோலாவை திருமணம் செய்து கொண்டார் என்ற திருமண பதிவு சான்றிதழை மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாநகராட்சி அங்கீரித்துள்ளது. கேத்ரினாவும் ரமேஷும் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டதாக திருமண சான்றிதழில் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டு டிசம்பர் 11ல், இந்த சான்றிதழ் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பற்றி இந்தூர் மாநகராட்சி திருமண பதிவாளர் நட்வர் சர்தா கூறுகையில், ‘‘‘திருமண பத்திரம் முற்றிலும் போலியானது. இதை மாநகராட்சி அளிக்கவில்லை. கேத்ரினா & ரமேஷ் பற்றி பரபரப்பு ஏற்படுத்துவதற்காக இந்த போலி சான்றிதழை விஷமிகள் தயாரித்து உள்ளனர்’’ என்றார்.
Source: http://www.dinakaran.com
No comments:
Post a Comment