உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாக சீனாவும், இந்தியாவும் திகழ்கின்றன. சீனாவின் தற்போதைய மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 135 கோடி. இதன் மூலம் மக்கள் தொகையில் சீனா அசைக்க முடியாத முதல் இடத்தில் உள்ளது.
2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 119 கோடியாகும். இந்தியாவை விட சீனாவில் கூடுதலாக 16 கோடி பேர்தான் உள்ளனர். இந்த நிலையில் சீனாவில் கடைபிடிக்கப்படும் திட்ட மிட்ட குடும்பக்கட்டுப்பாடு காரணமாக அங்கு மக்கள் தொகை பெருக்கம் குறையத் தொடங்கியுள்ளது.
“ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை” என்ற விழிப்புணர்வு பிரசாரமும், கடுமையான சட்டமும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கு வெற்றி கொடுத்துள்ளது. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை பெருகுவது முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் “கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் 0.6 சதவீதமாகவும், இந்தியாவில் 1.4 சதவீதமாகவும் இருப்பது தெரிய வந்தது. அதாவது சீனாவில் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் இந்தியாவில் 2 குழந்தை பிறக்கிறது.
இதே வேகத்தில் மக்கள் தொகை பெருகும் பட்சத்தில் இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியா முதல் இடத்தை பிடித்து விடும் என்று ஐ.நா. தன் அறிக்கையில் கூறியுள்ளது. மக்கள் தொகையை முழுமையாக கட்டுப்படுத்த இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இன்னும் 25 ஆண்டுகள் கழித்தே பலன் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment