ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சில மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையறிந்ததும் ஆந்திராவில் 500-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியில் உயிர் இழந்தனர்.
அவர் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களது குறைகளை உடனுக்குடன் தீர்த்ததால் ஆந்திர மக்களின் இதயத்தில் சிம்மாசனம் அமர்ந்தார். அவரது இழப்பை மாநில மக்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
இப்போதும் கூட அவரது சமாதி அமைந்துள்ள இருப்புலசாயா எஸ்டேட்டில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அவரது வாழ்க்கை கதையை அம்மா ஆர்ட் புரடொக்சன் நிறுவனம் டாகுமென்டரி சினிமாவாக தயாரித்துள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் ஆதித்யா இயக்குகிறார்.
இப்படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் ஜானி பாஷா, ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் சுபம், ராஜசேகர ரெட்டி உதவியாளர் கேரக்டரில் ராமுலுவும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி ரெங்காரெட்டி மாவட்டம் செவலா பகுதியில் தொடங்கியது. இதையடுத்து ஆந்திராவில் உள்ள 10 மாவட்டங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.
மொத்தம் 68 நாட்கள் நடந்த படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது.
முதலில் இப்படத்தை 60 நிமிடத்தில் முடிக்க டைரக்டர் ஆதித்யா திட்டமிட்டிருந்தார். ஆனால் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களை சேர்க்க வேண்டி இருந்ததால் 90 நிமிடம் நேரம் ஓடும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி டைரக்டர் ஆதித்யா கூறும்போது, ராஜசேக ரெட்டி டாகுமென்டரி சினிமா படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படப்பிடிப்புக்கு பிறகு நடைபெறும் வேலைகளை தற்போது தொடங்கி உள்ளோம். இது முடிய இன்னும் 20 நாட்கள் ஆகும். எனவே படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments:
Post a Comment