
கான்பூர் டெஸ்டில் ராகுல் டிராவிட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 136-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 28-வது சதம் ஆகும். இலங்கை அணிக்கு எதிராக அடித்த 3-வது செஞ்சூரியாகும்.பிராட்மேன் (29 சதம்) சாதனையை சமன் செய்ய அவருக்கு இன்னும் ஒரு சதம் தேவை. டிராவிட் அபாரமாக விளையாடி 144 ரன்கள் குவித்தார். 137-வது ரன்னை தொட்டபோது டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்து 4-வது இடத்தில் இருக்கும் ஆலன் பார்டரை (ஆஸ்திரேலியா) முந்தினார்.டிராவிட் 11,182 ரன் எடுத்து 4-வது இடத்தை பிடித்தார். பார்டர் 11,174 ரன் எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment