Wednesday, November 25, 2009

காம்பீர் சூப்பர் ஸ்டார் ஷேவாக் பாராட்டு


இலங்கைக்கு எதிராக கான்பூரில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்டில் ஷேவாக், காம்பீர் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. காம்பீர் 215 பந்தில் 15 பவுண்டரியுடன் 167 ரன்னும், ஷேவாக் 122 பந்தில் 18 பவுண்டரி 2 சிக்சருடன் 131 ரன்னும் எடுத்தனர். டெல்லியை சேர்ந்த இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 233 ரன் எடுத்தனர்.

காம்பீரின் ஆட்டத்தை ஷேவாக் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காம்பீர் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார். கவாஸ்கருக்கு பிறகு சிறந்த தொடக்க வீரர் அவர் ஆவார். காம்பீரின் ஆட்டம் என்னை பிரமிக்க வைக்கிறது. அளவுக்கு அதிகமான திறமை அவரிடம் இருக்கிறது.

தொடர்ந்து 4 சதங்களை அடித்துள்ள அவர் அடுத்த டெஸ்டிலும் சதம் அடிப்பார். ஒவ்வொரு டெஸ்டிலும் அவரால் சதம் அடிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

பேட்டிங்கில் அவர் தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளார். பந்துகளை அடித்து ஆடுகிறார். அவரது அதிரடி ஆட்டம் எனக்கு நெருக்கடியை தந்தது.

இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

No comments: