பொது மக்களின் வரி பணத்தை இப்படி நச்சு பாம்பை போல் சூறை ஆடுபவனுக்கு என்ன செய்யபோகிறது இந்த அரசு. எங்களது வரி பணத்தில் நீங்கள் கொண்டாட்டம் போடுகிறீர்கள். காலம் சீக்கிரம் பதில் சொல்லும்.
"மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே அடிப்படையாக இருக்கிறது.ஆசையினால் ஒன்றை அடைய விரும்புகிறோம்.அதனை அடைவதற்காக சிலர் தர்ம வழியிலிருந்து விடுபட்டு,அதர்ம வழியைக்கடைப்பிடிக்கிறார்கள்.எப்படியாவது ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற உந்துதலே தவறுகளுக்கு காரணமாகிறது.எனவே,ஆசையை விட்டொழிக்க வேண்டும். *அக்னியில் நெய்யை விடும்போது,அது மேலும் பெரிதாகிக் கொண்டுதான் போகிறதே தவிர அணைந்து விடுவதில்லை. அதைப்போலவே ஒரு ஆசை நிறைவேறும்போது,அடுத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது.நாமாக நிறுத்திக் கொள்ளும்வரையில் ஆசைகள் வந்து கொண்டேதான் இருக்கும். ஆசையில் இருந்து விடுபட மனதை இறைவனிடம் வைக்க வேண்டும். *ஆசைகள் மனிதர்களை பாவச்செயல்களில் ஈடுபடுத்தும் சக்தியாக இருக்கிறது.மனதில் இருக்கும் ஆசைகள் கூடிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர குறைவதில்லை.இதனால் இன்பத்தை காட்டிலும், துன்பமே அதிகமாக இருக்கிறது.எனவே,ஆசைக்கு தடுப்பு போட வேண்டியது அவசியம்"..... ...காஞ்சி பெரியவரின் வரிகள் உண்மையென நிரூபணமாகிவிட்டது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி மதுகோடா தன் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக ரூ.4 ஆயிரம் கோடி சம்பாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கோடி ரூபாயை ஹவாலா மோசடி மூலம் அவர் திரட்டி இருந்ததை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஆதாரப்பூர்வமாக கண்டுபிடித்து உறுதி செய்தனர்.
மதுகோடாவை கைது செய்ய அமலாக்கப்பிரிவினர் ஏற்பாடு செய்தனர். இதை அறிந்ததும் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ந்து விட்டார். அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரை கைது செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே மது கோடாவின் வலதுகரமான வினோத் சின்கா என்ற தொழில் அதிபரின் சகோதரர் விகாஸ் சின்கா நேற்று கைது செய்யப்பட்டார். சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் உள்பட வெளிநாட்டு வங்கிகளில் கோடி, கோடியாக பணத்தை முதலீடு செய்ய மதுகோடாவுக்கு விகாஸ் சின்காதான் மிகவும் உதவயாக இருந்தார் என்று அம லாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மதுகோடாவின் அலுவலகங்கள், வீடுகள், அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளின் வீடுகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். அப்போது மதுகோடாவின் வீட்டில் முக்கிய டைரி ஒன்று சிக்கியது.
அதில் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறப்பட்டது என்ற விபரம் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஊழல் பணத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விபரம் குறிப்பிடப் பட்டுள்ளது.
தற்போதைய மத்திய மந்திரி ஒருவரின் பெயரும் மதுகோடாவின் டைரியில் இருப்பது தெரியவந்துள்ளது. மதுகோடா மந்திரி சபையில் இருந்த 3 மந்திரிகளின் பெயர் அந்த டைரியில் எழுதப்பட்டுள்ள குறிப்புகளில் பிரதானமாக இடம் பெற்றுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் மதுகோடா ரூ.375 கோடி பதுக்கி வைத்துள்ள தகவல்களும் டைரி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டைரியில் உள்ளவர்கள் அனை வரிடமும் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
டைரி மூலம் நடந்த முதல்கட்ட விசாரணையில் விகாஸ் சின்கா 40 கோடி ரூபாயை மதுகோடாவிடம் இருந்து பெற்றுக்கொண்டு ராஞ்சியில் இருந்து கொல்கத்தா சென்று அங்குள்ள சில வங்கிகளில் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் வருமான வரித்துறை அதிகாரிகளும் நேற்று ஒருங்கிணைந்து சில அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
இதன் பயனாக மும்பை ஜாவேரி பஜாரில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மதுகோடா 61 கோடி ரூபாயை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறு, சிறு தொகையாக இந்த பணம் போடப்பட்டுள்ளது.
மதுகோடா தான் சம்பாதித்தது மட்டுமின்றி தனது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த சில மந்திரிகள் முறைகேடாக பணம் சம்பாதிக்க வழிவகை செய்து உதவி புரிந்துள்ளார். கமலேஷ்சிங், பானுபிரதாப் சிங், பந்த்திர்க்கி ஆகிய 3 பேரும் மதுகோடா போல பல நூறு கோடி சம்பாதித்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி உள்ளனர். வரும் 10-ந்தேதி முதல் 12-ந் தேதிக்குள் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராக 3 முன்னாள் மந்திரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
மதுகோடா ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை கொண்டு லைபிரியா, தாய்லாந்து நாடுகளில் சுரங்கம் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லி அருகே உள்ள நொய்டாவில் இருக்கும் பொருளாதார மண்டலத்தை ரூ.4 ஆயிரம் கோடிக்கு மதுகோடா விலை பேசிய தகவலும் கிடைத்துள்ளது.
இனி நிச்சயம் தப்ப முடியாது என்ற நிலையில் மதுகோடா சிக்கி உள்ளார். இன்று (சனி)அவர் ராஞ்சி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று தெரிகிறது. அவரை உடனடியாக கைது செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment