Monday, November 9, 2009

ஆசிரியையின் பிரசவம் இணையதளத்தில் ஒளிபரப்பு


அமெரிக்கா மின்னோ போபிசை சேர்ந்தவர் லியான்சி (வயது23). பள்ளிக்கூட ஆசிரியையான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது இவருக்கு முதல் குழந்தை. அவருக்கு வருகிற 19-ந்தேதி அன்று குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கணித்து உள்ளனர்.

இந்த பிரசவத்தை அவர் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய விரும்பியுள்ளார். இதை இணையதளம் நிறுவனம் ஒன்று ஒளிபரப்ப உள்ளது.

பிரசவ வலி ஏற்பட்டதில் இருந்து குழந்தை பிறக்கும் வரை அனைத்து நிகழ்ச்சிகளும் ஒன்று விடாமல் இணையதளத்தில் நேரடியாக பார்க்கலாம்.

இதற்காக கேமரா குழுவினரும் ஏற்கனவே தயாராக உள்ளனர்.

ஆனால் இந்த காட்சியை எல்லோராலும் பார்த்துவிட முடியாது. அந்த இணையதளத்தில் உறுப்பினர் ஆக வேண்டும். அப்போதுதான் அந்த வீடியோ காட்சியின் தொடர்பு கிடைக்கும்.

No comments: