Wednesday, November 25, 2009

இந்தி நடிகை கைது: நடிகர் குணாலை கொன்றது எப்படி? போலீஸ் விசாரணை


நடிகர் குணால் கொலை வழக்கில் இந்தி நடிகை லவீனா பாட்டியா கைதாகியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடந்தது. குணால் “காதலர் தினம்”, “புன்னகை தேசம்” போன்ற தமிழ் படங்களில் நடித்தவர். அவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அப்போது அவ்வீட்டில் குணால் தோழியும் நடிகையுமான லவீனா பாட்டியா இருந்தார்.போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது குணால் எப்படி செத்தார் என்று எனக்கு தெரியாது என்றும் பாத்ரூம் போய் விட்டு திரும்பி வந்து பார்த்த போது தூக்கில் பிணமாக தொங்கினார் என்றும் கூறினார்.

இதையடுத்து குணால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்தனர். குணால் தந்தை இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு லவீனா கைதாகியுள்ளார்.லவீனா மீது சந்தேகம் உள்ளதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அவரிடம் துருவி துருவி விசாரணை நடக்கிறது.

குணாலை லவீனாதான் கொன்றார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டி இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அவரை கொன்றது ஏன்? என்று லவீனாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments: