
நியூயார்க் : இந்திய பணக்காரர்கள் வரிசையில், முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய். இவரை தொடர்ந்து, லட்சுமி மிட்டல் மற்றும் அனில் அம்பானி ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த "போர்ப்ஸ்' பத்திரிகை இந்தியாவை சேர்ந்த முதல் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய். இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில், லட்சுமி மிட்டல் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1.44 லட்சம் கோடி ரூபாய். இவருக்கு அடுத்த மூன்றாமிடத்தில், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி இடம் பெற்றுள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 84 ஆயிரம் கோடி ரூபாய். இவர் கள் மூவரின் சொத்து மதிப் பும் முந்தைய ஆண்டை விட பல சதவீதங் கள் அதிகரித் துள்ளன. விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி மற்றும் எஸ்ஸார் குழுமத்தின் சசி அண்ட் ரவி ருயா ஆகியோர் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு முறையே, 71 ஆயிரத்து 520 கோடி ரூபாய் மற்றும் 65 ஆயிரத்து 280 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு வெளியிடப் பட்ட இத்தகைய பட்டியலில் 27 கோடீஸ்வரர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்தாண்டு, 52 கோடீஸ்வரர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், சீனர்களின் பணக்காரர்கள் பட்டியலில், 79 கோடீஸ் வரர்கள் இடம் பெற்றுள்ளனர். எனினும், இந்தியாவை சேர்ந்த 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு, சீன பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட அதிகம். இதுகுறித்து, "போர்ப்ஸ்' கூறுகையில்,"பொருளாதார நிலை சரியாக இருந்தால், இந்தியா, மற்ற நாடுகளை விட, அதிகளவில் கோடீஸ்வரர்களை வேகமாக உருவாக்கும் திறன் கொண்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு பெண்கள்: எனினும், இந்தியாவை சேர்ந்த 100 பணக் காரர்கள் பட்டியலில் ஆறு பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சாவித்ரி ஜிண்டால் என்பவரின் சொத்து மதிப்பு மிக அதிகம்.
No comments:
Post a Comment