
சென்னையில் இருந்து இன்று காலை 10.45 மணிக்கு கொழும்புக்கு ஏர்லங்கா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 267 பயணிகள் இருந்தனர். இதில் 52 பேர் ஹஜ் பயணிகள். அவர்கள் கொழும்பில் இருந்து சவுதி அரேபியா செல்ல இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் இருந்து பறக்க முயன்றபோது ரபி அகமது (52) என்ற ஹஜ் பயணி நெஞ்சு வலிப்பதாக கூறி சத்தம் போட்டார். இதை தொடர்ந்து புறப்பட்ட 15 நிமிடத்தில் விமானிகள் விமானத்தை தரை இறக்கினர். விமான நிலையத்தில் உள்ள டாக்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் ரபிஅகமது உடலை பரிசோதித்து வாயு கோளாறுதான் காரணம் என்றனர். அதோடு அவர் விமானத்தில் செல்ல முழு தகுதியுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அந்த விமானம் அனைத்து பயணிகளுடன் 12 மணியளவில் புறப்பட்டு சென்றது.
No comments:
Post a Comment