Wednesday, November 18, 2009

பிரான்சில் ஆசிரியர்களை சுட துப்பாக்கியுடன் பள்ளி சென்ற சிறுவன் போலீசார் மடக்கி பிடித்தனர்


பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் அருகே உள்ள பியூவாய்ஸ் நகரை சேர்ந்தவன் ஜான்ஆல்பர்ட் (வயது13). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவன் அங்குள்ள ரோமன் கத்தோலிக் பள்ளியில் படித்து வந்தான். இவன் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். இதற்கிடையே வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியையும், குண்டுகளையும் காணவில்லை. இதனால் அவனது பெற்றோர் பரபரப்படைந்தனர்.

வீட்டில் பல இடங்களிலும் துப்பாக்கியை தேடினர். இந்த நிலையில் ஜாக்ஆல்பர்ட் அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், என் வாழ்க்கையில் இது தான் கடைசி நாள் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசில் தெரிவித்தனர். உடனே போலீசார் அவன் படிக்கும் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவனை சோதனை நடத்தினர்.

அப்போது அவனிடம் துப்பாக்கியும் குண்டும் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்து வந்தது ஏன் என அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவன், ஆசிரியர்கள் என்னை படிக்கசொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் அதற்காக என்னிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். எனவே, ஆசிரியர்களை சுட்டுக்கொன்று விட்டு, நானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்றான். இச்சம்பவம் அப்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: