
செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தகவல் தொடர்பு துறையில் அரசு நிறுவனம், பி.எஸ்.என்.எல். தவிர தனியார் நிறுவனங்கள் ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் உள்ளன.
ஒரு நிறுவனத்தில் செல்போன் சந்தாதாரராக உள்ள ஒருவர் அதில் இருந்து விலகிதான் விரும்பும் வேறு நிறுவனத்துக்கு மாறி போக வேண்டும் என்றால் அந்த எண்ணை ரத்து செய்தவிட்டு அதன் பிறகு அந்த நிறுவனத்தில் புதிய எண் பெறவேண்டும். இந்த முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் எந்த செல் நிறுவனத்திலும் சேர்ந்து பயன்பெற விரும்பினால் அதற்கு தடை விதிக்க கூடாது. அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள போன் எண்ணையே பயன்படுத்தியவாறு வேறு நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளலாம் என மத்திய தகவல் தொடர்பு ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது.
எந்த மொபைல் போன் ஆபரேட்டர்களிடமும் மாறிக்கொள்ளலாம். இதற்கு ரூ.19 மட்டும் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் தான் பயன்படுத்தும் அதே செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாறினாலும் பயன்படுத்தும் வசதி 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் 60 சதவீத ரோமிங் கட்டணத்தை குறைத்துள்ளது. 115 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் ரோமிங் சமயத்தில் செல்போன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் டர்போ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் அனைத்து ரோமிங் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 காசு வீதமும் வேறு நெட்ஒர்க் எண்களை தொடர்பு கொள்ள 80 காசு வீதமும் வசூலிக்கப்படும் என்று தலைமை செயல் அதிகாரி ராஜீவ் ராஜ்கோபால் தெரிவித்தார்.
No comments:
Post a Comment