Monday, November 23, 2009

ரூபாயை சாலையில் போட்டு ரூ.1.3 லட்சம் பணப்பை பறிப்பு


கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரசோழன் (48), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிக்காக பணம் எடுக்க, கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வங்கிக்கு நேற்று வந்தார். தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.1.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். பணப்பையை சைக்கிள் ஹேண்ட்பாரில் மாட்டிவிட்டு புறப்படுவதற்கு தயாரானார்.அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி, ‘’10 ரூபாய் கிழே கிடக்கிறது. அது உங்களுடையதா’’ என்று கேட்டுள்ளார். உடனே ராஜேந்திர சோழன் கீழே குனிந்து 10 ரூபாய் நோட்டை பார்த்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சைக்கிளில் இருந்த பணப்பையை அந்த ஆசாமி எடுத்துக் கொண்டு தப்பினார். அதிர்ச்சியடைந்த ராஜேந்திர சோழன் கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினர் விரட்டி சென்றனர்.அதற்குள் அந்த ஆசாமி தப்பி விட்டான். இதுகுறித்து ராஜேந்திர சோழன் கொடுத்த புகாரின்படி கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, திருட்டு ஆசாமியை தேடுகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கூடுவாஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments: