Wednesday, November 18, 2009

பெண்களுக்கான “வயாகரா” மாத்திரை தயாரிப்பு


ஆண்களின் “செக்ஸ்” உணர்ச்சியை தூண்டுவதற்கு “வயாகரா” என்ற மாத்திரை தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனையில் உள்ளது. தற்போது பெண்களுக்கும் இது போன்ற மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.

“செக்ஸ்” உணர்ச்சி குறைவாக உள்ள பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாத்திரைக்கு “பிலிபேன்செரின்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மாத்திரை 3 கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டது. செக்ஸ் உணர்வு குறைந்த பெண்களின் சுரப்பிகளை தூண்டி விட்டு மூளையின் செயல்பாட்டை அதிகரித்து அதன் மூலம் செக்ஸ் உணர்ச்சி தூண்டப்பட்டது.

பிலிப்பேன் செரின் மாத்திரை அதிவேக சக்தி கொண்டது அல்ல. மிதமாக “செக்ஸ்” உணர்வை தூண்டக்கூடியது. செக்ஸ் பிரச்சினை உள்ள பெண்களுக்கும், நோய் வாய்ப்பட்டு கருத்தரிக்கும் வாய்ப்பை இழந்த பெண்களுக்கும் இது பயன்படும்.
இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. தற்போது வெளிநாடுகளில் இந்த மாத்திரையை பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

No comments: