Wednesday, November 18, 2009

சரியாக பாடம் நடத்தவில்லை என்று கண்டித்ததால் மாணவிகளின் தந்தையை கொன்ற ஆசிரியர்கள்


ஆந்திர மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு பாஷா(வயது 50), இவரது 2 மகள்கள் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

அவர்கள் சரியாக பாடம் படிக்கவில்லை. இதனால் பாஷா பள்ளிக்கூடத்துக்கு சென்று ஒழுங்காக பாடம் சொல்லிக்கொடுங்கள் என்று ஆசிரியர்களை கண்டித்து திட்டினார். இந்த நிலையில் பாஷா மர்மமான முறையில் இறந்தார்.
இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரில் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து பாஷாவை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். பின்னர் இரவு முழுவதும் பஞ்சாயத்து அலுவலகத்தில் அடைத்து வைத்தனர்.
இதில் அவர் உடல் நலம் குன்றி சுய நினைவு இழந்தார். உடனே அவரை மகபூப் நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.

இது பற்றி போலீசாரிடம் கேட்ட போது பாஷா குடிபோதையில் சென்று ஆசிரியர்களிடம் தகராறு செய்து இருக்கிறார். தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து அவரை பள்ளிக்கு வெளியே அனுப்பி வைத்தனர். பாஷா உடலில் உள் காயங்களோ, வெளிக்காயங்களோ எதுவும் இல்லை. அவர் போதைக்கு அடிமையானவர் இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதில் அவர் இறந்து இருக்கலாம். என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்

No comments: