Tuesday, November 10, 2009

அமெரிக்காவில் மூக்குத்தி அணிந்த மாணவி பள்ளியில் இருந்து “சஸ்பெண்டு”


அமெரிக்காவில் உள்ள யுதா பகுதியில் உள்ள பவுன்டிபுல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அமர்தீப்சிங். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர். இந்தியரான இவர் பெத்ல கேமில் லெகியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிகிறார்.

இவரது மகள் சுஷானா பாப்லா (12). இவள் பவுன் டிபுல்லில் உள்ள பப்ளிக் பள்ளியில் 7-வது வகுப்பு படித்து வருகிறாள். இவள் சீக்கிய மத மரபுப்படி மூக்கில் சிறிய அளவிலான மூக்குத்தி அணிந்திருந்தாள். இது ஒழுக்க கேடானது என்று கூறி அப்பள்ளி நிர்வாகம் மாணவி சுஷானாவை கடந்த மாதத்தில் இருந்து சஸ்பெண்டு செய்தது.

பள்ளியின் இச்செயலுக்கு சுஷானாவின் தந்தை அமர்தீப்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் கலாசார சின்னமாக மூக்கில் மூக்குத்தியை அணிகின்றனர். அதுபோலதான் எனது மகளும் மூக்குத்தி அணிந்து இருக்கிறார்.

மூக்குத்தி அணிவது அவளது உரிமை மற்றும் மத அடையாளமாகவும் கருதப்படுகிறது. எனவே அவளது கலாசார உரிமையில் தலையிட பள்ளி நிர்வாகத்துக்கு உரிமையில்லை என்று தெரிவித்துள்ளார்.

மாணவி சுஷானா கூறும்போது, மூக்குத்தி அணிந்துள்ள நான் இந்தியாவில் உள்ள எனது நெருங்கிய உறவினர்களுடன் இருப்பது போன்று உணர்கிறேன். ஏனென்றால் எனது குடும்பத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றாள்.

இச்சம்பவம் அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

No comments: