Wednesday, November 18, 2009

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவன் “டிஸ்மிஸ்” மனித உரிமை அமைப்பிடம் புகார்


என்ன ஒரு முட்டாள் தனமான தண்டனை. இதற்கு இந்த மனித வுரிமை கழகத்தின் சரியான நடவடிக்கை நாங்கள் எதிர்பார்கிறோம். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஐதராபாத்தில் பஷீர் பாக்சில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் முஸ்தபா (7). இவனது வீடு பள்ளிக்கூடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தினமும் இவனை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து வந்து விடுவார்கள்.

சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு வர 7 நிமிடம் தாமதமாகி விட்டது. இதனால் நிர்வாகத்தினர் அந்த மாணவனை பள்ளிக்கூடத்தை விட்டே டிஸ்மிஸ் செய்து விட்டனர்.

அந்த மாணவனை வகுப்புக்குள் அனுமதிக்காமல் வராண்டாவில் நீண்ட நேரம் நிற்க வைத்து கஷ்டப்படுத்தி உள்ளனர். இது பற்றி கேட்க சென்ற பெற்றோரையும் பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெளியே பல மணி நேரம் காக்க வைத்து உள்ளனர்.

பள்ளிக்கூடத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை கமிஷனிடம் புகார் கொடுத்து உள்ளனர்.

இதே பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் ஆயிஷ் என்ற மாணவனை பிரம்மால் அடித்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

No comments: