Wednesday, November 18, 2009

கோவில் கட்டி பரபரப்பை ஏற்படுத்திய டோனி ரசிகர்: தேர்தலில் போட்டி


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திராசிங் என்பவர் டோனி ரசிகர் மன்ற தலைவராக உள்ளார்.

இவர் டோனிக்கு கோவில் கட்ட முடிவு செய்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கினார். இதற்கு டோனியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவில் கட்டுவதை அவர் கைவிட்டார்.

பின்னர் டோனியை பாராட்டும்விதமாக அருங் காட்சியகம் அமைக்க போவதாக அவர் அறிவித்தார். இந்த நிலையில் ஜிதேந்திரா சிங் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். ஹாடியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, நான் டோனியின் தீவிர ரசிகன். தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் டோனியின் பெயரை எனது சுயலாபத்திற்காக உபயோகப்படுத்துவதாக நினைக்கவில்லை என்றார்.

ஜார்க்கண்டில் வருகிற 25-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

ரன் எடுக்கும் போது கோவிலை கட்டிவிட்டு, தோனி அவுட்டாகும் போது அவர் வீட்டை இடிக்க கிளம்புறதுதானே இந்த வெறி பிடித்த ரசிகர்கள் செய்வது. விளையாட்டை விளையாட்டாகவே பாருங்கள், கோவில் கட்ட வேண்டும் என்றால் அவரவர் மனதில் கட்டிக் கொள்ளுங்கள்.

No comments: