
அமெரிக்கா அருகே கரீபியன் கடலில் உள்ள குட்டி நாடான ஹைதியில் கடந்த 12-ந்தேதி கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. சுமார் 2 லட்சம் பேர் பலியாகினர்.
மீட்பு பணியில் வெளிநாட்டு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 130 பேரை அவர்கள் மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் பூகம்பம் ஏற்பட்ட 15 நாட்களுக்கு பிறகு போர்ட் ஆவ் பிரின்ஸ்நகரில் இடிந்து கிடந்த வீட்டுக்குள் இருந்து ஒரு இளம்பெண் மீட்கப்பட்டு இருக்கிறாள்.
அவளது பெயர் டார்லின், அவளை பிரெஞ்சு நாட்டை சேர்ந்த குழுவினர் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்ததால் அவளது காலில் படுகாயம் ஏற்பட்டு இருந்தது. அவள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.
இடிந்து கிடந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டதாகவும் அதை தொடர்ந்து அவள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment