Thursday, January 28, 2010

“இந்தி தேசியமொழி அல்ல” குஜராத் ஐகோர்ட்டு தீர்ப்பு


சுரேஷ் கஜாடியா என்பவர் குஜராத் ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில் குஜராத்தில் உற்பத்தியாகும் சில பொருட்களின் பாக்கெட்டுகளில் இந்தியில் விவரங்கள் குறிப்பிடப்படுவது இல்லை. இந்தி தேசிய மொழி. எனவே மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அச்சிட உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள் இந்தி மொழி தேசிய மொழி என்று அங்கீகாரம் அளித்து அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.எனவே இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளமுடியாது. இதனால் பொருட்களின் பாக்கெட்டுகளில் இந்தி மொழியில் அச்சிட்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தீர்ப்பு கூறினர்.

No comments: