
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சினிமாவில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் 1969-ல் திரையுலகில் அறிமுகமானார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார். தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீசான பா படத்தில் சிறுவனாக நடித்து திரும்பி பார்க்க வைத்தார்.இதற்காக பாராட்டுகளும், பரிசுகளும் குவிகின்றன. தற்போது நடித்த வரும் ராண் என்ற படம் ஜனவரி 29 அன்றும் “டீன் பட்டி” பிப்ரவரி 26-ந்தேதியும் ரிலீசாகின்றன. “ஷ¨பைட்” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
மும்பையில் சமீபத்தில் நடந்த சினிமா பட விழாவில் அமிதாப்பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் பேசிய அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு நீண்ட தூரம் போக வேண்டி உள்ளது. விரைவில் ஓய்வும் பெற போவதாக சூசக தகவல் வெளியிட்டார். எனது எல்லைக்கோடு முடிந்துவிட்டதாக உணர்கிறேன் என்றார்.
எனவே அமிதாப்பச்சன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக இந்தி பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.
ஏற்கனவே 1984-ல் ஒருமுறை சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் நுழைந்தார். அலகாபாத் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1988-ல் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.
No comments:
Post a Comment