
சென்னையைச் சேர்ந்த புவியியல் நிபுணர் எஸ். ராமச்சந்திரன். கிரகங்களின் மாற்றம் காரணமாக இந்த ஆண்டு பெரிய அளவில் பூகம்பம் ஏற்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் மற்றும் அபூர்வ நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறியுள்ளார். பூகம்பமானது உலக அளவில் இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வரை இருக்கும். 5 முறை இந்த பூகம்பம் நிகழும். அது மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்தியாவில் தென்மேற்கு பருவ மழையிலும் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு குறைந்தது 5 முறையாவது பூகம்பம் ஏற்படும். சனி, வியாழன், கிரகங்களிடையே சாதகமான நிலை இல்லை. இது புதன், செவ்வாய், சனி கிரகங்களின் நிலையிலும் மாற்றும் ஏற்படுவதால் இயற்கை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
இவர் இதற்கு முன் 2005-ல் கத்ரினா புயல், 2008-ம் ஆண்டு நிஷா புயல் தாக்கும் என்று கணித்து கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள் சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவானிலும், ஜூன் 1-ந்தேதியும், 4-ந்தேதியும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து துருக்கி வரை பூகம்பம் ஏற்படும். ஜூலையில் மத்திய தரைக்கடல் பகுதியில் சுனாமி அலைகள் தாக்கும். இதனால் இத்தாலிக்கு பாதிப்பு ஏற்படும்.
ஜூலை 18-ந்தேதி முதல் ஜூலை 28-ந்தேதிக்குள் இந்தியாவில் பூகம்பம் ஏற்படும். அது மத்திய கிழக்கு நாடுகள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக புவியியல் துணை பேராசிரியர் என்.ராஜேஸ்வரராவ் கிரகங்கள் மாற்றத்தால் பூகம்பங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்திய நில அமைப்புகள் புவியியல் துறை இயக்குனர் பாலசுப்பிரமணியன் பூகம்பங்கள் தாக்கும் அபாயம் இல்லை என்று மறுத்துள்ளார்.
No comments:
Post a Comment