Wednesday, January 20, 2010

இங்கேயும் “ஸ்டேண்டிங்” விமானத்தில் நின்றுகொண்டு பயணம் செய்த பயணிகள்


மும்பையில் இருந்து குவைத்செல்லும் குவைத்நாட்டு விமானத்தில் 3பயணிகளுக்கு உட்கார இருக்கை ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு டிக்கெட் மட்டும் கிடைத்தது. விமானத்தில் ஏறிய பின்பு தான் 3பேருக்கும் இருக்கை இல்லை என தெரியவந்தது. குறிப்பிட்ட நேரத்தில் குவைத் செல்ல வேண்டிஇருந்ததால் மும்பையில் இருந்து குவைத் வரை விமானத்தில் நின்று கொண்டு பயணம் செய்தனர்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி நடந்தது. இந்த தகவல் தற்போது தான் இந்திய விமான போக்குவரத்து இலாகாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

ஏன் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட வில்லை போன்ற மற்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.

No comments: