
2007-2008-ம் ஆண்டுகளில் மட்டும் சிசேரியன் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்களில் சிசேரியன் எண்ணிக்கை 65 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதற்கு உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் மெட்டின் கில்ம ஜோக்லு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ஆசியாவைச் சேர்ந்த இந்தியா- சீனா போன்ற நாடுகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெரும்பாலான தனியார் டாக்டர்கள் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் தேவையே இல்லாமல் சிசேரியன் செய்து விடுகிறார்கள். சிசேரியனை விட சுகப்பிரசவம்தான் நல்லது.
சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் கூடுதலாக ரூ. 20 ஆயிரம் கிடைக்கிறது என்பதால், அதை ஆதரிக்கிறார்கள். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிசேரியன் ஆபரேசன் செய்யும் தாய்- குழந்தைக்கு நிறைய பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. சில தாய்மார்களுக்கு கருப்பையை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. டாக்டர்கள் பலர் பண ஆசையில் தங்களது மனசாட்சியை அடகு வைத்து விடுகிறார்கள். மனிதாபிமானம் மிகுந்த டாக்டர்கள் யாரும் தேவையே இல்லாமல் சிசேரியன் செய்யமாட்டார்கள்.
சில பெண்களுக்குதான் பிரசவ நேரம் காலதாமதமானால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். ஆப்போது சிசேரியன் செய்வதை தவிர வேறு வழியில்லை.
சுகப்பிரசவம் ஆகக்கூடிய நிலையில் உள்ள பெண்களுக்கும் சிசேரியன் செய்து குழந்தையை எடுப்பதுதான் வேதனைப்படக்கூடிய, கண்டிக்கத்தக்க ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment