Wednesday, January 20, 2010

சூரிய கிரகணம் ஆண்களுக்கு ஆபத்து என்று பெண்கள் பீதி-பரிகார பூஜை வேப்பமரத்துக்கு தாலி கட்டி வழிபாடு



கங்கண சூரிய கிரகணத்தை போல இதற்கு முன்பு 1901-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி தமிழ்நாட்டில் தெரிந்தது.

அதைத் தொடர்ந்து 108 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் கங்கண சூரிய கிரகணம் தோன்றுகிறது. சூரியன் முழுவதுமாக மறைக்கப்படுவதே கங்கண சூரிய கிரகணம் ஆகும்.

இந்த கங்கண சூரிய கிரகணம் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நீடிக்கிறது.

கங்கண சூரிய கிரகணம் ஏற்படுவதால் ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற வதந்தி பனப்பாக்கம் பகுதியில் இன்று காலை பரவியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இன்று காலை பனப்பாக்கம், ஓச்சேரி, ஆயர்பாடி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு சுத்தம் செய்து வாழை இழையில் பச்சரிசி படைத்து அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

மேலும் சில பெண்கள் கங்கண சூரிய கிரகணத்தால் ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விட கூடாது என்று வேப்ப மரத்துக்கு தாலி கட்டி வழிபட்டனர்.

வழக்கமாக சூரியகிரகணம், சந்திரகிரகணம் என்றால் வீடுகள் முன்பு அகல் விளக்கு ஏற்றி வழிபடுவர். தற்போது புதிதாக வேப்பமரத்துக்கு தாலி கட்டி வழிபடுவது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான இன்று 108 வருடங்களுக்கு பிறகு சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதனால் ஆண்களுக்கு ஆபத்து என்று பீதி கிளம்பியது. எனவே பெண்கள் தங்கள் கணவருக்கும், மகனுக்கும் கிரகண கோளாறு ஏற்படும் என்று பயந்தனர்.

எனவே காஞ்சீபுரம் நகரில் பெரும்பாலான பெண்கள் வெற்றிலை வைத்து 5விளக்கு ஏற்றி பரிகாரம் செய்தனர். நேற்று இரவு கணவன், மகன் ஆகியோரை அருகில் உள்ள கோவில்களுக்கு அழைத்துச் சென்று தலையை சுற்றிய தேங்காய்களை உடைத்தார்கள்.

இன்று காலை பெண்கள் 5மணிக்கு குளித்து அருகில் உள்ள அரசமரம், வேப்ப மரம் உள்ள கோவிலுக்கு சென்றனர். கயிற்றில் மஞ்சளை முடி போட்டு வேப்பமரம், அரச மரம் ஆகியவற்றில் கட்டினார்கள்.

இன்று மாலை வீடுகளில் 5எலுமிச்சை பழங்களை இரண்டாக அறுத்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து விளக்கேற்றி பரிகார நிவர்த்தி செய்கிறார்கள்.

இன்று காலை பனப்பாக்கம், ஓச்சேரி, ஆயர்பாடி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு சுத்தம் செய்து வாழை இழையில் பச்சரிசி படைத்து அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
சில பெண்கள் கங்கண சூரிய கிரகணத்தால் ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விட கூடாது என்று வேப்ப மரத்துக்கு தாலி கட்டி வழிபட்டனர். வழக்கமாக சூரிய கிரகணம், சந்திரகிரகணம் என்றால் வீடுகள் முன்பு அகல் விளக்கு ஏற்றி வழிபடுவர். தற்போது புதிதாக வேப்பமரத்துக்கு தாலி கட்டி வழிபடுகிறார்கள்.

No comments: