ராமநாதபுரம் : இலங்கை அதிபராக ராஜபக்ஷே மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால், அடுத்த ஆட்சியாளர் வரும் வரை காத்திருக்கும் எண்ணத்தை கைவிட்டு, தாயகம் திரும்ப அகதிகள் பலர் முடிவு செய்துள்ளனர்.
இலங்கையில் விடுதலை புலிகள் அழிவுக்கு பின், நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் ராஜபக்ஷேவும், எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவ பொறுப்பேற்ற பொன்சேகாவும் களம் இறங்கினர். தமிழ் தேசிய கூட்டணி கட்சி பொன்சேகாவை ஆதரித்தது. ஆனாலும், தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றார். புலிகளை அழிக்க உத்தரவிட்ட ராஜபக்ஷே, அழித்து காட்டிய பொன்சேகா, என இருவருமே புலிகள் அழிவுக்கு காரணமானவர்களாக இருந்தனர். இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டணி கட்சி ஆதரித்த பொன் சேகா வெற்றி பெற்றால், தங்களுக்கு ஆதரவு கிடைக்கும், என அகதிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது ராஜபக்ஷே வெற்றியால் அகதிகள் எண்ணம் சிதைந்தது. "அடுத்த அதிபர் தேர்தல் வரை இந்தியாவில் இருக்கும் பட்சத்தில், தங்கள் உறவுகள், உடமைகளை இழக்க நேரிடும். எனவே, முடிவு எதுவாகயிருந்தாலும், தாயகம் திரும்புவதே சரியாக இருக்கும்,' என அகதிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், இலங்கைக்கு திரும்பிச் செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பிக்க துவங்கி உள்ளனர்.
அகதிகள் கூறியதாவது: அரசியல் மாற்றத்துக்கு பின், தாயகம் திரும்ப ஆசைபட்டோம். அது நிறைவேறாமல் போய்விட்டது. இனியும் காலம் கடத்தும் எண்ணம் இல்லை. எந்த ஆட்சி நடந்தாலும், தாயகத்தில் காலத்தை கடத்த முடிவு செய்து விட்டோம். அதற்காக விண்ணப்பிக்க வந்துள்ளோம், என்றனர்.
மண்டபம் முகாம் அகதிகள் அதிர்ச்சி: ராஜபக்ஷே வெற்றி குறித்து மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழர்கள் கூறியதாவது: ராஜபக்ஷே அதிபராக இருந்தபோது இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களை யாரும் மறக்க முடியாது. முள்வேலி முகாமில் தமிழர்களை அடைத்து வைத்து விட்டு, தமிழர்களின் குடியிருப்புகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டனர். போர் மரபிற்கு எதிராக தேவாலயங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என தமிழர்கள் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டன. இதை செய்த ராஜபக்ஷே தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால், இலங்கையில்,இனி தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாது. அதிபர் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டால், இலங்கை செல்லலாம் என, எண்ணியிருந்தோம். இப்போது அது கனவாகிவிட்டது. இனி, எங்கள் எதிர்காலத்தை எப்படி எதிர் நோக்குவது என தெரியவில்லை, என்றனர்.
மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி: விடுதலைப்புலிகளுடன், ராணுவம் போர் புரிந்த சூழலில், தமிழக கடல் மார்க்கமாக புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக கூறி, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, தாக்குதல்களை இலங்கை கடற்படையினர் நடத்தினர். புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்நிலையில், "அதிபர் தேர்தலில் மீண்டும் ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளதால், இலங்கை கடற்படையும் ரோந்து என்ற பெயரில் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதலை நடத்தும். இதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழில் பாதிப்படையும் சூழல் ஏற்படும்,' என, மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் .

No comments:
Post a Comment