
ஆந்திர கவர்னராக இருந்து, செக்ஸ் ஊழலில் சிக்கி பதவி பறிபோன பழம் பெரும் காங்., தலைவர் என்.டி.திவாரிக்கு, சொந்த ஊரான டேராடூனில் இப்போதும் தலைவலி தான். காலையில் எழுந்து, எங்காவது பொது இடங்களுக்கு சென்றால், மீடியாக்கள் துரத்துகின்றன. உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூன் நகரில் திவாரி, தன் வீட்டை விட்டு வெளியே வரவே முடிவதில்லை. சமீபத்தில் தன் ஆதரவாளர்களுடன் பேச வெளியே வந்தவரை, நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து, திவாரியால் தப்பவே முடியவில்லை; அவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. எப்படி கூற முடியும்? எல்லா கேள்விகளுமே செக்ஸ் ஊழல் பற்றித்தானே! ஆனால், ஒரு உள்ளூர் நிருபர் கேட்ட கேள்வி, திவாரியின் பொறுமையை சிதைத்து விட்டது; "திவாரிஜி, ஏற்கனவே ஒருவர் தன்னை உங்கள் மகன் என்று கூறி வழக்கு போட்டார்; இப்போது, டில்லியைச் சேர்ந்த ஒரு வக்கீலும், தன்னை உங்கள் மகன் என்று சொல்கிறாரே' என்று கூற, கொதித்து விட்டார் திவாரி. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "ஆமா! இந்தியா பூரா எனக்கு பிள்ளைகள் இருக்காங்க...!'
No comments:
Post a Comment