Friday, January 29, 2010

ஐந்து முறை ஜெயலலிதா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்


சென்னை வானகரத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகள் இல்லத் திருமண விழா சமீபத்தில் நடந்தது. ஜெயலலிதாவுக்கு, வழக்கம்போல் ஆடம்பர வரவேற்பு கொடுத்திருந்தனர். திருவள்ளூர் மாவட்ட செயலர் மாதவரம் மூர்த்தி, தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் முன் ஒரு முறை, செய்த பின் ஒரு முறை, பேச துவங்கும் முன், துவங்கிய பின், பேசி முடித்த பின் என, ஐந்து முறை ஜெயலலிதா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். "இதைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்த ஜெயலலிதா, "ஏன் இத்தனை முறை காலில் விழறீங்க' என கேட்டார். ஆனால், மாதவரம் மூர்த்தி அதை பொருட்படுத்தவில்லை. "முன்பெல்லாம், ஒரு சிலர் மட்டுமே ஜெயலலிதா காலில் விழுவார்கள்; இப்ப, எல்லாருமே காலில் விழ ஆரம்பித்து விட்டனர். இதனால், கூடுதல் எண்ணிக்கையில் விழுந்து, "அம்மா' மனதில் இடம்பிடிக்கிறார் போலிருக்கு...' என, "கமென்ட்' அடித்தார் மூத்த நிருபர் ஒருவர்.

No comments: