Tuesday, August 3, 2010

அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் : சச்சின் சாதனை


அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை இந்திய மாஸ்டர் ‌பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார். இதுவரை சச்சின் 169 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி மாஜி கேப்டன் ஸ்டீவ் வாக் 168 போட்டிகளில் விளையாடி அதி டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை தக்க வைத்திருந்தார். சச்சின் 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 ஆயிரத்து 742 ரன்கள் குவித்துள்ளார். 48 சதங்களும், 55 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 442 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக ஜெயசூர்யா 444 ஒரு நாள் சர்வதே போட்டிகளில் விளையாடியுள்ளார். சச்சின் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 17 ஆயிரத்து 598 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: