Friday, August 6, 2010

புரோட்டீன் உணவுகளால் சர்க்கரை நோய் வரலாம்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateலிபோர்னியா : புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளால் இந்தியர்களுக்கு டயபடீஸ் வரும் வாய்ப்பு அதிகம் என்று அமெரிக்க ஆய்வு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வசிக்கும் இந்தியர்களிடம் புரோட்டீன் உணவுகளுக்கும் டயபடீசுக்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 45 முதல் 79 வயதுக்கு உட்பட்ட 146 இந்தியர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் வெளியான தகவல் வருமாறு: புரோட்டீன் நிறைந்த உணவுகள் மேக்ரோநியூட்ரியன்ட் எனப்படுகின்றன. பேக்கரி பொருட்கள், மாட்டுக்கறி, முட்டை, பழங்கள், பால், பாலாடை கட்டி, யோகர்ட்,  விதை, சாஸ், சூப், இனிப்பு என சுமார் 6,000 உணவுகளில் மேக்ரோநியூட்ரியன்ட் அதிகம் இருக்கிறது.

அந்த உணவுகளை ஒரு குழுவினர் தொடர்ந்து சாப்பிட்டு வர கேட்டுக் கொள்ளப்பட்டனர். மற்றொரு பிரிவினருக்கு புரோட்டீன் குறைந்த பொருட்கள் தரப்பட்டன.
குறிப்பிட்ட நாட்கள் கழித்து பரிசோதித்ததில், மேக்ரோநியூட்ரியன்ட் உணவுகளை சாப்பிட்ட இந்தியர்களில் 28 சதவீதத்தினருக்கு டயபடீஸ் அறிகுறி ஏற்பட்டிருந்தது. மற்றொரு பிரிவினருக்கு அது அறவே இல்லை. எனவே, மேக்ரோநியூட்யன்ட் கொண்ட புரோட்டீன் நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுவது டயபடீஸ் வராமல் தடுக்க உதவும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

No comments: