Thursday, August 5, 2010

எடையைக் குறைக்க ஜில்லுனு ஒரு ட்ரீட்மென்ட்

உடல் செல்களை குளிரூட்டி, எடையை குறைக்கும் புதிய வழிமுறையை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக உடல் கொழுப்பை குறைக்க வெப்பம் சார்ந்த சிகிச்சை முறைகளையே பயன்படுத்துவது வழக்கம். ஆனால் முதல்முறையாக உடலை குளிரச் செய்து, கொழுப்பை கரைக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘ஜெல்டிக்’ எனும் இந்த கருவியின் மூலம் சுமார் 25 சதவீதம் வரையிலான உடல் கொழுப்பை கரைக்கலாம்.
லண்டன் ஹார்வார்டு பல்கலைக்கழக மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டேவிட் கோல்டுபெர்க் கூறும்போது, ‘‘இந்த புதிய முறையில் செல்கள் ஜீரோ டிகிரி வெப்பநிலைக்கு குறைக்கப்படுகின்றன. இந்த குளிர் வெப்பநிலையில், தோல் மற்றும் சதைகளை பாதிக்காத வகையில் கொழுப்பு மட்டும் கரைக்கப்பட்டு விடுகிறது’’ என்றார்.

No comments: