Tuesday, August 10, 2010

வயதை குறைக்கும் கிரீம் தேடி அலையும் ஆண்கள்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateபெண்களின் அழகு கிரீம்களை மறைந்து, ஒளிந்து ஆண்கள் பூசத் தொடங்கியது போய், வயதாவதை தடுக்கும் கிரீம்கள் மீது இப்போது அவர்கள் கவனம் திரும்பியுள்ளது. இதை நீல்சன் நிறுவன புள்ளிவிவரம் புட்டு வைக்கிறது.
இதுபற்றி நீல்சன் நடத்திய ஆய்வு விவரம்:

முகத்தில் எண்ணெய் பசை, கரும்புள்ளிகள், மேடு பள்ளங்களை சரி செய்து பொலிவுடன் காட்டும் ‘பேர்னஸ்’ கிரீம்களை பெண்கள்தான் முன்பு பயன்படுத்துவார்கள். கடையில் அவற்றை தனக்கென கேட்டு வாங்க முடியாத இளைஞர்கள், வீட்டில் சகோதரியின் கிரீமை ரகசியமாக எடுத்து மறைந்திருந்து பூசிக் கொள்ளத் தொடங்கினர்.

இதை வீட்டினர் கவனித்தார்களோ இல்லையோ, நிறுவனங்கள் கவனித்து விட்டன. இளைஞர்களின் கஷ்டத்தை போக்க, ஆண்களுக்கான கிரீம்களை மார்க்கெட்டில் இறக்கி விட்டன. முகம் மட்டும் பொலிவாக இருந்தால் போதுமா... வயதாவதைத் தடுக்க வேண்டாமா என்று நடுத்தர ஆண்கள் கவலைப்பட்டனர். பாண்ட்ஸ் ஏஜ் மிரேக்கிள், ஓலே டோட்டல் எபெக்ஸ்ட், நிவியா விசேஜ் க்யூ10 என பெண்களுக்கான வயதாவதைத் தடுக்கும் சரும பாதுகாப்பு கிரீம்களை ஆண்கள் தேட தொடங்கி விட்டனர்.
டெல்லி, மும்பை, பெங்களூர் உட்பட மாநகரங்களில் 20 சதவீத ஆண்கள் இப்படி பெண்களின் கிரீம்களை பயன்படுத்துவதாக கூறுகிறது புள்ளிவிவரம்.

No comments: