
அப்போது, அங்கு வந்த 5 வாலிபர்கள், “ நாங்கள் மப்டி போலீஸ், இந்த நேரத்துல உங்களுக்கு இங்கே என்ன வேலை?, பாலியல் தொழில் செய்கிறீர்களா?“ என்று கேட்டு மிரட்டினர். பயந்து போன காதல் ஜோடி, ‘நாங்கள் லவ்வர்ஸ். நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல‘ என்றனர். ‘போலீசிடமே திமிராக பேசுகிறீர்களா’ என்று கேட்டபடி, 5 பேரும் ரமேஷை சரமாரியாக அடித்து உதைத்து கீழே தள்ளினர். சசிகலாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இருவரும் கூச்சலிட்டதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் 5 வாலிபர் களும் தப்பிவிட்டனர்.
இதுகுறித்து, திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மதியரசு தலைமையில் போலீசார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு இன்னொரு காதல் ஜோடியிடம் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் கொட்டிவாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சோழன் (38), சீனிவாசன் (29), நாகராஜ் (30), குமார் (24) மற்றும் ஒருவர் என்பது தெரிந்தது. 4 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர். மற்றொருவரை தேடுகின்றனர்.
பெசன்ட்நகர் கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பலர், பெற்றோருக்கும் போலீஸ் விசாரணைக்கும் பயந்து புகார் கொடுப்பதில்லை. இதுபோன்ற அடாவடி செயல்களை தடுக்க இப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு கமிஷனர் தகவல்
இதுகுறித்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா கூறுகையில், “கடற்கரைக்கு வரும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெசன்ட் நகர் கடற்கரையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்படும்“ என்றார்.
No comments:
Post a Comment