Monday, August 9, 2010

ரயில் நிலையத்தை கலக்கும் பெண் போர்ட்டர்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஉ.பி. மாநிலம் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையம் இரவு, பகல் எந்த நேரமும் பரபரப்புடன் இருக்கும். டெல்லி, மும்பை  ரயில்பாதையில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும். இதனால், இங்கு போர்ட்டராக இருப்பவர்களுக்கு நல்ல வருமானம். சுமை தூக்கும் தொழில் என்பதால் ஆண்கள்தான் பெரும்பாலும் அந்த வேலையில் இருப்பார்கள். ஆனால், ஆக்ராவில் பெண் ஒருவரும் போர்ட்டராக இருக்கிறார். அவரது பெயர் முத்ரா தேவி(35).

குடும்ப வறுமை காரணமாக இந்த வேலைக்கு வந்ததாக முத்ராதேவி கூறுகிறார். ஆக்ரா ரயில் நிலையத்துக்கு அதிகாலையும், இரவு நேரத்திலும் அதிக ரயில்கள் வந்து செல்லும் இதனால், இரண்டு ஷிப்டுகளில் முத்ராதேவி வேலை பார்க்கிறார். பெண் என்பதால், எந்த பிரச்னையும் இல்லை என்று கூறும் முத்ரா தேவி, சிவப்பு நிற சுடிதார் அணிந்து லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு லாவகமாக செல்கிறார். பெண் என்பதால் பயணிகள் யாரும் அவரை ஒதுக்குவதில்லை. ஆண் போர்ட்டர்களும் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள். கணவரும், 3 குழந்தைகளும் ஒத்துழைப்பதால், வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு, போர்ட்ராகவும் வேலை செய்ய முடிவதாக முத்ரா தேவி சொல்கிறார்.

No comments: