மிஸ்டு கால்’ காதலில் விழுந்த நெல்லை இளம்பெண்ணை பலாத்காரம் செய்து நிர்வாணமாக படம் பிடித்த வாலிபர், போதை மயக்கம் தெளியாமல் அரையிலேயே மயங்கி கிடந்ததால் போலீசாரிடம் சிக்கினார். தென்காசி மலையன்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகள் அருந்ததி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவருடைய செல்போனில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு எண்ணில் இருந்து தொடர்ந்து ‘மிஸ்டு கால்’ வந்துள்ளது. இதையடுத்து, அந்த எண்ணை தொடர்பு கொண்டு அருந்ததி, பேசினார். மறுமுனையில் பேசிய வாலிபர், தான் துபாயில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வாலிபர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பேசிய வாலிபர், துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வருவதாகவும் அங்கு சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய அருந்ததி, பெட்டியுடன் திருவனந்தபுரம் சென்றுள்ளார். அதற்கு முன்பாக இருவரும் நேரில் பார்த்ததில்லை என்பதால், அந்த வாலிபர் தான் அணிந்து வரும் உடையின் நிறத்தை கூறியுள்ளார். அதை வைத்து அருந்ததி அவரை அடையாளம் கண்டு கொண்டார்.
அன்று இரவு இருவரும் திருவனந்தபுரம் தம்பானூர் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அப்போது வாலிபர் அருந்ததிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார். அந்த வாலிபரும் அதிகளவு மது அருந்தியுள்ளார். போதையில் அருந்ததி மயக்கினார். பின்னர், அவரை பலாத்காரம் செய்த அந்த வாலிபர் அவரை நிர்வாணப்படுத்தி படம் எடுத்துள்ளார். மறுநாள் பிற்பகல் ஆகியும் அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், தம்பானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்த போது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என நினைத்த போலீசார்,
அவர்களை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்கள் போதையில் இருப்பது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, அவர்களின் போதையை தெளிய வைத்து போலீசார் விசாரித்தனர். அதில் அந்த வாலிபர் செங்கோட்டை வடகரை ஜாகீர் உசேன் ரோடு பகுதியைச் சேர்ந்த மைதீன் மகன் அமீது என தெரிய வந்தது. அமீதை போலீசார் கைது செய்தனர்.

No comments:
Post a Comment