Monday, August 9, 2010

வரதட்சணை கேட்பது குற்றமல்ல

வரதட்சணை கேட்பது குற்றமல்ல. ஆனால், கேட்டது கிடைக்கவில்லை என்பதற்காக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினால் மட்டுமே குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமர்சிங். இவரது மனைவி பெயர் சந்தோஷ். இவர் கடந்த 1993ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை காரணமாக சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டதாக அமர்சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
இந்த வரதட்சணை கொடுமை வழக்கில் அமர்சிங், அவரது சகோதரர் மற்றும் தாயார் ஆகியோர் குற்றவாளிகள் என கீழ்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 3 பேரும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமர்சிங்கின் தாய் மற்றும் சகோதரரை விடுதலை செய்தது. ஆனால், சந்தோஷின் கணவர் அமர்சிங்குக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.

அமர்சிங்கின் தாய் மற்றும் சகோதரர் விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பிலும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அமர்சிங்கும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், Ôமனைவி வீட்டாரிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தருமாறு கேட்டது உண்மைதான். அவர்கள் ஸ்கூட்டர் வாங்கித் தரவில்லை. அதற்காக என் மனைவியை நான் எந்தவகையிலும் நிர்பந்தம் செய்யவோ அல்லது கொடுமைப்படுத்தவோ இல்லைÕ என்று அமர்சிங் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.பி.பட்நாயக் ஆகியோர், “அமர்சிங், ஸ்கூட்டர் கேட்ட விஷயம் இரண்டு சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்காக மனைவியை அவர் கொடுமைப்படுத்தினார் என்பது சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை. வரதட்சணை கேட்பது குற்றமாகாது. அது கிடைக்காத பட்சத்தில் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ கொடுமைப்படுத்தினால் தான் குற்றமாகும். இந்த கொடுமையின் காரணமாக மனைவி இறந்தால் அது தகுந்த சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதனால், அமர்சிங்கை விடுதலை செய்கிறோம்Ó என தீர்ப்பளித்தனர்.

வரதட்சணை கேட்பது குற்றமாகாது. அது கிடைக்காத பட்சத்தில் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ கொடுமைப்படுத்தினால் தான் குற்றமாகும்.

No comments: