Monday, August 9, 2010

துப்பாக்கியுடன் 50 கொள்ளையர் பெட்டி பெட்டியாக புகுந்து நகை, பணம் பறிப்பு

பீகார் மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை, 50 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், துப்பாக்கிகளுடன் மறித்தது; பெட்டி பெட்டியாக நுழைந்து, பயணிகள் பலரிடம் இருந்தும் பணம், நகைகளை பறித்தது. தட்டிக் கேட்டவர்களுக்கு துப்பாக்கி கட்டை அடி விழுந்தது. சிலருக்கு கத்தி வெட்டு கிடைத்தது.
ரயிலில் இருந்த பெரும்பாலானோர், சிவன் கோயிலுக்கு ‘காவடி’ எடுத்துச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் தான். கொள்ளையர்களை எதிர்த்து, பயணிகளை பாதுகாக்க வேண்டிய ரயில்வே போலீசார், துப்பாக்கி இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு, கோபாவேசத்துடன் பொங்கி எழுந்தனர். ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர்.

பீகார் மாநிலம் என்றாலே, வழிப்பறி, கொள்ளைகளுக்கு பெயர் பெற்றது. வெளிமாநில சரக்கு லாரி ஒன்று தனியாக சென்றால் போதும், பட்டப்பகலில் வழிமறித்து, டிரைவரை அடித்து ஓடவைத்து, லாரியையே அபேஸ் செய்து விடும் கேவலமான கொள்ளைக் கும்பல்கள் நடமாட்டம் அதிகம்.
ரயில்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த அளவுக்கு மிக கொடூரமான அளவில் கொள்ளை நடந்தது இதுவே முதன் முறை.
பாட்னாவில் இருந்து 135 கி.மீ. தூரத்தில் உள்ளது லக்கிசராய் மாவட்டம். அங்குள்ள பலூய் என்ற ரயில் நிலையத்தை தாண்டி நேற்று அதிகாலை 4.45க்கு இந்த சம்பவம் நடந்தது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பீகார் வழியாக டெல்லி செல்லும் லால் கிலா எக்ஸ்பிரஸ் ரயில், அதற்கு சற்று முன் தான் பலூய் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

அப்போதே, நான்கு கொள்ளையர்கள், ரயிலில் ஏறி மிரட்ட ஆரம்பித்தனர். அவர்களை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இருவர் தப்பி ஓடிவிட்டனர். ரயில் அடுத்த ரயில் நிலையத்தை அடையும் முன், நிதானமாக சென்று கொண்டிருந்த ரயிலில் 50 கொள்ளையர்கள் ‘திபுதிபு’ வென ஏறினர்.
அவர்களில் சிலர், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ரயில் பெட்டிகளில் ஏறினர். சரமாரியாக துப்பாக்கியை சுட்டு வந்ததால், பயணிகள் அலறினர். அடங்கியும் போய் விட்டனர். பெட்டி பெட்டியாக ஏறி, பயணிகளிடம் இருந்த பணம், நகைகளை கும்பல் பறித்தது.

முதலில் ஏ.சி., பெட்டிகளில் கொள்ளையடித்து முடித்து விட்டு, ஸ்லீப்பர் பெட்டிகளில் போய் கொள்ளையடித்தனர். மொத்தம் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இவ்வளவும், 15 நிமிடத்தில் முடிந்து விட்டது. அTamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateடுத்ததாக கியுல் ரயில் நிலையத்தை ரயில் அடைந்தது. அதற்குள் கொள்ளையர்கள் நிதானமாக இறங்கிச் சென்று விட்டனர். கொள்ளையர்களை எதிர்த்த சில பயணிகளுக்கு துப்பாக்கி கட்டையால் அடி விழுந்தது. சிலருக்கு கத்திக்குத்தும் நடந்தது. ரயில்வே போலீசில் சிலருக்கும் அடி விழுந்தது. 21 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  

கியுல் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் சிவபக்தர்கள் கூட்டாக சேர்ந்து, ஸ்டேஷன் மாஸ்டர் அறை உட்பட சில அறைகளை சூறையாடினர். பொருட்களை உடைத்தனர். ‘துப்பாக்கி இல்லாமல் ரயில்வே போலீசை அனுப்புவதா’ என்று கோஷமிட்டனர். சம்பவம் பற்றி பயணிகள் கூறுகையில், ‘இப்படி கூட ரயிலில் கொள்ளை நடக்குமா என்று நினைக்க நினைக்க அந்த பயங்கர நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை. சினிமா படத்தில் தான் இப்படி பார்த்திருக்கிறோம். இதை இப்போது அனுபவித்தோம். போலீஸ் துப்பாக்கிகூட இல்லாமல் இருப்பது மிகவும் அஜாக்கிரதையானது’ என்று தெரிவித்தனர்.

275 ரயில்களுக்கு பாதுகாப்பு இல்லை

பீகாரில் இருந்தும், அதன் வழியாகவும் ஒரு நாளைக்கு 275 ரயில்கள் செல்கின்றன. இதில் பாதுகாப்பு பொறுப்பு, 15 சதவீதம் தான் ரயில்வே போலீசிடம் உள்ளது. மற்றவை எல்லாம் பீகார் மாநில போலீஸ் வசம் உள்ளது. ரயில்வே போலீசில் போதுமான ஆள்பலம் இல்லை; ஆயுத பலம் அறவே இல்லை. பீகார் போலீஸ் , ரயில் பயணிகள் பாதுகாப்பு பற்றி கண்டுகொள்வதே இல்லை. இவ்வளவு நடந்தும்,’ போலீசிடம் துப்பாக்கி இல்லை என்று சொல்வது சரியல்ல; ரயிலில் கொள்ளையர்களை எதிர்த்தபோது துப்பாக்கியுடன் தான் போலீசார் இருந்தனர்’ என்று பீகார் போலீஸ் அதிகாரிகள் கூசாமல் பொய் சொல்கின்றனர்.

No comments: