
கடம்பூர் மலைப்பகுதியில் கன்றுக்குட்டியை தாக்கிய கரடியை தாய் பசு முட்டி கொன்றது. ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் கரளையம் லைன்தொட்டி கிராமம் உள்ளது. நேற்றுமுன்தினம் காட்டில் இருந்து ஆண் கரடி ஒன்று திடீரென கரளையம் கிராமத்தில் புகுந்தது. அங்கு பட்டியில் அடைக்கப்பட்ட 3 ஆடுகளை கடித்து கொன்றது. சில ஆடுகள் காயம் அடைந்தன. மணி என்பவரின் வீடு முன்பு நிறுத்தியிருந்த பைக் இருக்கையை சேதப்படுத்திவிட்டு அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்தது. கன்றுகுட்டி அலறியதால் ஆவேசமடைந்த தாய் பசுவும், மற்ற மாடுகளும் சேர்ந்து கரடியை துரத்திச் சென்று, கொம்புகளால் முட்டித் தள்ளிக் கொன்றன. தகவலறிந்து வனத்துறையினர் வந்து கரடியின் உடலை கைப்பற்றி ஆசனூரில் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர், அங்கேயே கரடியின் சடலத்தை எரித்தனர்.
1 comment:
பெற்றால் தான் பிள்ளையா ?
மற்ற பசுக்களும் சேர்ந்து முட்டிக்கொன்றது...
பேஷ்...பேஷ்...
மாட்டுத் தொழுவத்தில் கரடி புகுந்தது புதுசு...
Post a Comment