
இ&மெயில் மூலம் போலியான தகவல்களை கொடுத்து சாமியார்களிடம் ஒரு கும்பல் பல லட்சம் மோசடி செய்து வருவதாக, கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோராவிடம் பாதிக்கப்பட்ட சாமியார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் செய்தனர்.
அதன்படி, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் முதற்கட்டமாக போலியான இ&மெயில் வரும் முகவரியை கண்டு பிடித்தனர். அவைகள் ஆந்திர மாநிலம் ஏளூரில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தனிப்படை யினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பிரகாஷ் (37) என்பவர் முன்னுக்குப் பின் பதில் அளித்தார். போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
வாக்குமூலத்தில் பிரகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:
எனது சொந்த ஊர் மதுரை. இன்ஜினியரிங் படித்துள்ளேன். எனது தந்தை ராஜகோபால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு அதே நிறுவனத்தில் ஓசூர் கிளையில் எனக்கு வேலை கிடைத்தது. எங்களது குடும்பத்தில் பல பிரச்னைகள் இருந்தன. ஓய்வின்போது தந்தைக்கு நிறுவனம் வழங்கிய தொகையின் ஒரு பகுதியை முதலீடாக வைத்து, மதுரையில் ஜவுளிக்கடை நடத்தினோம். அதுவும் நஷ்டத்தில் முடிந்தது. இதனால், எங்களது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில், சாமியார் ஒருவர் எங்களை அணுகினார். உங்கள் குடும்பத்தில் பல பிரச்னைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். ஒரு பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார். பூஜை செய்ய ^2 லட்சம் செலவாகும் என்றார். தந்தை மீதம் வைத்திருந்த ^2 லட்சத்தை கொடுத்தோம்.
பணத்தை பெற்றுக் கொண்ட சாமியார் அதன் பிறகு வரவே இல்லை. தலைமறைவானார். நாங்கள் வறுமையில் வாடினோம். சில மாதங்களிலேயே தந்தை இறந்து விட்டார். அடுத்த சில மாதங்களில் தாயாரும் இறந்தார். பின்னர், சென்னை மேற்கு தாம்பரத்தில் குடியேறினேன். எங்களை ஏமாற்றிய போலி சாமியார்களை பழி வாங்க வேண்டும் என்று என் மனம் துடித்தது. எங்கெல்லாம் சாமியார்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் அவர்கள் பெயரில் மடம் இருக்கிறது என்று தேடிப்பார்த்து அவர்களுக்கு இ&மெயில் அனுப்புவேன். அதில், நான் மிகப்பெரிய பணக்காரன். ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று இ&மெயிலில் குறிப்பிடுவேன்.
பதிலுக்கு மெயில் அனுப்பினால், உங்களுக்கு தேவையான கார் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு சேவை களை செய்கிறேன். அதற்கு குறைந்த கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுவேன். இதன்படி பல சாமியார்கள் என்னிடம் பணம் கட்டி ஏமாந்துள்ளார்கள். இப்படி அவர்கள் ஏமாறும்போது நான் சந்தோஷப்படுவேன்.
இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட சாமியார்களிடம் சுமார் ^8 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்துள்ளேன்.
இவ்வாறு பிரகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
நித்யானந்தா ஆசிரமத்திலும் மோசடி
பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமம், ஆந்திராவில் உள்ள கல்கி ஆசிரமம், கடப்பாவில் உள்ள ராமகிருஷ்ண ஆசிரமம், விவேகானந்தா ஆசிரமம், மயிலாப்பூரில் உள்ள ரமண கேந்திரா ட்ரஸ்ட் ஆகிய ஆசிரமங் களை பிரகாஷ் ஏமாற்றி யுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேவை செய்பவர்களிடம் கருணை
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சேவை செய்யும் சாமியார்களை பிரகாஷ் ஏமாற்றுவதில்லை. அப்படியே ஏமாற்றினாலும், அவர்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவான். இப்படி பல சாமியார்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளான். கிடைக்கும் மோசடி பணத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்துள்ளான். ஏழை மாணவர்களுக்கு பள்ளி கட்டணம் கட்டியுள்ளான். ஆந்திரா சென்ற பிரகாஷ், அங்கு விபத்தில் இறந்த ஒருவரின் மனைவியை திருமணம் செய்துள்ளார். அப்போதே அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளன.
No comments:
Post a Comment